Monday, September 6, 2010

சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

சம்மாந்துறை தொழிற்ப்பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பப் படிவங்களை காரியாலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தொழிற்ப் பயிற்ச்சிப் பொறுப்பதிகாரி திரு.வசீம் தெரிவித்தார்.அத்துடன் தொழிற்ப் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழாவின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களும் எமது ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு  இணங்க இணைக்கப்பட்டுள்ளன.




                                                                       

லைலதுல் கத்ர்' ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது





லைலதுல் கத்ர் என்பது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையாகும் ‘மகத்தான இரவு’, ‘ஏற்பாட்டின் இரவு’ என்பது இதன் பொருள். மனிதன் இவ்வுலகில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை மட்டும் வாழ்கின்றான். மனிதனின் நிலையான பெருவாழ்வு அவனது மரணத்தின் பிறகே ஆரம்பமாகிறது. நிலையான இன்ப வாழ்வுக்கு ஆயத்தம் செய்யும் ஒரு சாதனமாக லைலதுல் கத்ர் வழங்கப்பட்டுள்ளது. இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. ‘லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது’ (அல்குர்ஆன்)
இஸ்ரேலியர்களில் ஒரு மனிதன் ஆயிரம் மாதங்கள் போர் கருவி தாங்கி அல்லாஹுதஆலாவுக்காகப் புனித யுத்தத்தில் ஈடுபட்டான் என்னும் செய்தி அண்ணலாருக்கு அறிவிக்கப்பட்டது.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத ஆலாவிடம் தமது சமுதாயத்தவர்களின் வாழ்நாள் குறைவானதென்றும் நீண்ட காலம் வாழ வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் அமல் செய்து அபரிமிதமான நன்மைகளைச் சம்பாதிப்பார்களே என்றும் இரந்து கொண்டார்கள்.
எனவே அல்லாஹ்வுத்த ஆலா ஆயிரம் மாதங்களை விடவும் மேலான ஒரு இரவை ஒவ்வொரு வருட றமழான் மாதத்திலும் அருளி பெருமானாரின் அவாவை நிறைவேற்றியுள்ளான்.
றமழான் மாதத்தில் இவ்விரவு எத்தினத்தில் வருகின்றது என்பது நிச்சயமில்லை. அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்விரவு இதுதான் என்று வரையறுத்துக் கூறப்படவில்லை.
இவ்விரவு றமழான் மாதத்தில் வருகின்றதென்பது மட்டும் கூறப்படுகிறது. எனவே றமழான் ஆரபத்திலிருந்து கடைசிவரை இவ்விரவுக்கான முயற்சிகளும் அமல்களும் பிராத்தனைகளும் இடம்பெற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹதீஸிலும் “றமழானின் கடைசிப் பத்தில் உள்ள ஒற்றைப்பட்ட நாட்களில் லைலதுல் கத்ர் இரவை தேடிக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். லைலதுல் கத்ர் தொடர்பாக உபாதாவின் ஸாமித் (ரலி) இவ்வாறு கூறுகிறார். “ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தார்கள்.
அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தேன். இவ்வேளையில் இன்னாரும், இன்னாரும் சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆகவே லைலதுல் கத்ர் இரவை ரமழான் மாதத்தில் 29ம், 27ம், 25ம் இரவிலும் தேடுங்கள் என்றார்கள். (புஹாரி 2023)
இது தவிர ஆயிஷா (ரலி) அவர்கள் றமழான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப் படையான இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுங்கள். (புஹாரி 2017)
மேலும் ஒரு ஹதீஸில் ஆயிஷா (ரலி) கூறுகையில் ரமழானின் கடைசிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லற தொடர்பை நிறுததிக்கொள்வார்கள்.
இரவை (அல்லாஹ்வை தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (அல்லாஹ்வை வணங்குவதற்காக) குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். (புஹாரி 2024)
இவ்வாறு அதிக நேரம் இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தனது கால்கள் வீங்கும் அளவு நின்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தராவீஹ், வித்ர் போன்ற தொழுகைகளை அதிக நேரம் தொழுதுள்ளார்கள். இது தவிர குர்ஆன் திலாவத், திக்ர் போன்ற விடயங்களிலும் அதிக நேரம் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒருவர் தான் மேற்கொள்ளும் வணக்கங்கள் அனைத்தும் இறை அச்சத்தோடும், உளத்தூய்மையோடும் மேற்கொள்ளல் வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. “செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே. ஒருவன் தான் எந்த நோக்கத்தோடு ஒரு விடயத்தைச் செய்கிறானோ அதற்கான கூலியையே அவன் பெற்றுக்கொள்வான்.” (முஸ்லிம்)
சங்கைமிக்க லைலதுல் கத்ர் இரவிலே மலக்குகள் பூமிக்கு இறங்குகிறார்கள். இத்தினத்திலேயே தான் அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இக்குர்ஆனில் ஒன்பது இடங்களில் மட்டுமே லைலதுல் கத்ர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
இத்தினத்தில் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருந்து இந்த இரவின் பலன்களை பெற்றுக்கொள்கின்றனர். அதிக நேரம் வணக்கங்களில் ஈடுபட்டு பலகோடி நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. “றமழான் காலங்களில் ஒன்றுக்கு எழுபது மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. (ஹதீஸ்) றமழானின் கடைசிப் பத்து நாட்களும் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள். (புஹாரி 2025)
மேலும் அளவற்ற நன்மைகளையும் பல மடங்கு கூலியையும் இம்மாதத்தில் தன் அடியார்களுக்கு அள்ளி வழங்குகின்றான். இது பற்றி ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறப்படுகிறது. நோன்பு எனக்காக நோற்கப்படுவதாகும். அதற்குரிய கூலியை நானே வழங்குகிறேன்.
றமழானின் இறுதிப் பத்தில் உள்ள நாட்கள் நரக விடுதலைக்குரிய நாட்களாகும். இந்நாட்களில் தாம் செய்த பாவங்களுக்கு மனம் இரங்கி மன்னிப்பு கோர வேண்டும்.
இதனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
“இந்த மாதத்தின் முதல் பகுதி அருள் நிறைந்தது. நடுப்பகுதி பாவமன்னிப்பு மிக்கது. இறுதிப் பகுதி நரக விடுதலைக்கு உரியது.” (பைஹகீ) மற்றுமொரு இடத்தில் யார் றமழானில் நன்மையை எதிர்பார்த்து ஈமானுடன் இரவுத் தொழுகையில் ஈடுபடுகிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். (நபி (ஸல்)
இவ்வாறு ரமழான் மாதத்தில் நரக விடுதலை கிடைப்பதோடு அதிக நன்மைகளும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ரமழானில் அதிக தான தர்மங்கள் செய்து நன்மைகள் அதிகம் பெற வாய்ப்பு உள்ளது. விசேடமாக ‘பித்ரா’ என்ற தர்மம் உள்ளது. இது தவிர ஹதியா, ஸதகா போன்றனவும் நடைமுறையில் உள்ளன.
இதனையே நபி (ஸல்) அவர்கள் வலக்கை கொடுக்கும் தர்மத்தை இடக்கை அறியாத வண்ணம் தர்மம் செய்யுமாறு கூறி உள்ளார்கள்.
எனவே நாமும் இந்த ரமழான் நமது வாழ்நாளில் உள்ள இறுதி றமழான் என நினைத்து அதன் பலனை உரிய முறையில் அடைவோமாக!

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.