Saturday, November 27, 2010

புதிய சந்தைத்தொகுதி திறப்பு விழா


வீரமுனையில் மகிந்த சிந்தனையின் 3060 கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளின் உதவியுடன் சிறிய சந்தைத்தொகுதியொன்று நேற்று(26/11/2010) பிரதேச செயலாளர் A.மன்சூர் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்ற விபரம் (தகவல்-zeo.org)


Inter zone teachers transfer list
 http://www.strzeo.org/htdoc/TeacherTrList.html 

Out zone teachers tansfer list
http://www.strzeo.org/htdoc/TeacherTrListout.html

எமதூரின் கலையுணர்வுக்கான ஒத்துழைப்பு இதுவா?

எமது செய்திப் பிரிவினர் செய்தி சேகரிக்கச் சென்ற போது கண்ட சம்பவமே இது.27.11.2010 அன்று சம்மாந்துறை நகர மண்டபத்திலே மாத்தளைக் கமால் அவர்களின் கான மழை இறுவெட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது. இதற்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையோ பத்திலும் குறைவு. ஏன் எமது மக்கள் கலைஞர்களை ஊக்குவிக்களிப்பவர்களாய் இல்லை.

இவர் முஸ்லிம்களுக்காய் உதித்த முதல் கட்சியான முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவரது கட்சிப் பாடலைப் பாடியவரும் கூட. இவ்வாறு எமது சமூகத்திற்காய் அர்பணித்த ஒருவருக்கு நாம் எமது மரியாதையை செலுத்த வேண்டாமா? ஏன் எமது சம்மாந்துறை மண் இவ்வாறு கலைஞர்களை அவமதிக்கும் சமூகமாக காணப்படுகிறது?

வீரமுனையிலே இசையுடன் ஹராத்தை சம்பாதிக்கும் வகையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு அணி அணியாய் திரண்ட நாம் ஏன் இதற்கு செல்ல முடியாது? இது எம் மக்களுக்கு விளங்குகிறதா? உண்மையில் அக் கலைஞர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவருக்கு உதவி செய்யக் கூட எமது சம்மாந்துறை மக்கள் தவறிவிட்டார்கள். இவ்வாறான விடயங்களில் எமது அக்கறை செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவானது விழிப்புணர்வூட்டுகின்றது. 







Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.