Monday, February 28, 2011

கிழக்கு மாகாணத்திற்கான “வேலைக்காக காசு’ திட்டத்தில் அனைவரும் பங்குதாரராக வேண்டும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக்கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அம்பாறை கச்சேரி மண்டபத்தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக விவசாயத்துறையில் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.விவசாயத்துறை மட்டுமல்லாமல் நீர்ப்பாசனம், சிறுகைத்தொழில், வீதிப்போக்குவரத்து, கல்விபோன்ற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளம் என்பது நமது நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை மாறாக கால நிலை மாற்றத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத்துறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.நுவரெலியா மற்றும் மலைநாட்டு பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒருவகை அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் அங்கு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் அம்மக்களுக்கான மாற்று இருப்பிடங்களை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் தோன்றின. ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறிய மக்களின் வாழ்வாதார நிலையை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் வேலைக்காக காசு ( இச்ண்ட ஞூணிணூ தீணிணூடு) திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திற்கு உடனடியாக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத் திட்டத்தின் கீழ் குளங்கள், வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதன் மூலம் வேலையில் ஈடுபடும் தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக வேலைக்காக உணவு ( ஊணிணிஞீ ஊணிணூ ஙிணிணூடு) திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் ஆகியனவும் வழங்கப்படவுள்ளது.வெள்ளத்தால் நாட்டுக்கும் அரசுக்கும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ஆகையால் சகலரும் இதில் பங்குதாரர்களாக ஆகவேண்டும்.வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகரங்களும் எதிர்காலத்தில் வழங்கப்படும்.
கடல்கோள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும்.தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தேர்தல் வாக்குகளை மையப்படுத்தி வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நமது அரசியல் முறையில் இவற்றை முற்றாகத் தவிர்க்கவும் முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் அமைச்சரான பீ.தயாரட்ண,ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எஸ்.எம்.சந்திரசேகரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், சரத்வீரசேகர ஷிரியானி விஜயவிக்ரம், பியசேன அனோமாகமகே, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, நவரட்ணராஜா, விமல வீரதிஸா நாயக, மாகாண சபை உறுப்பினர்களான அப்துல் மஜீத், புஸ்பராஜா, தயாகமகே, தேவராப்பெரும, அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.