Wednesday, March 16, 2011

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் தினத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொருட்டு 50 ஆயிரம் பொலிஸாருடன் முப்படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருமாக 70 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய முறைகேடுகள், மோசடிகள், வன்முறைகளிலீடுபடுவோர் மீது பாரபட்சமன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
235 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய 36 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் இடம்பெறுகின்றன. மொத்த 34433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் வாக்களிக்கத்தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 9444455 பேராகும். 7402 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள், குழப்பங்களிலீடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர். அவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
இதுவரையில் தவறாக நடந்து கொண்ட 15 வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தோட்ட பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக பொதுமக்கள், வேட்பாளர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸார் தமது கடமையை நேர்மையகவே செய்து வருகின்றனர். நாம் எந்தத் தரப்புக்கும் பக்கச்சார்பாக நடக்கவில்லை. அதனை மீறி எந்தப் பொலிஸ் அதிகாரியாவது முறைகேடாக நடக்க முற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம்.
சில கட்சிகள் என் மீது பழி சுமத்த முற்படுகின்றன. எனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். கடமையைச் சரிவரச் செய்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள், ஆலோசனைகளை மதித்து சட்டரீதியான செயற்பாடுகளை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாகவே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தேர்தல் நிலவரங்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்

நாளை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களைப் பெறுவதற்காக சம்மாந்துறை இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்து இருங்கள். நாளை 40% இற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.