Tuesday, March 22, 2011

நிலவெடிப்புக்கான காரணத்தை அறிய அப்பிரதேசத்தில் ஆய்வு நடத்தப்படும்

ஏறாவூர் பகுதியில் பல இடங்களிலும் தரையிலிருந்து நீர் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மேலும் சில நாட்கள் அந்தப் பிரதேசத்தை அவதானிக்க வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் தெரிவித்தார்.
நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்øவயிட்டனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிணறுகளிலும் நீர் நிறமாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். நீர் வெளியேறும் இடங்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பின் ஊடாக வெளிவந்து கொண்டிருக்கும் நீர் மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பூரண சந்திரனின் தாக்கத்தினால் அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர் அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர். என்.பி.விஜேயானந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் விரும்பத்தகாத அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்வுக்கு பின்னர் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் கவனமாக இருக்

“கைப்பற்றப்பட்ட சபைகளின் தலைவர்களை கட்சியின் தலைமை விரைவில் தீர்மானிக்கும்”

அம்பாறை மாவட்டத்தில் நாம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு நமது கட்சி தீர்மானிக்கும் ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.