Thursday, March 31, 2011

வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 2.10 மணிவரை பாடசாலை வகுப்புகள் கிழக்கு கல்வி அமைச்சு பணிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6 இலிருந்து உயர்தரம் வரையிலான வகுப்புகள் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையில் மாத்திரம் பிற்பகல் 2.10 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விசேட சுற்றறிக்கையை சகல மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.10 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் ஏனைய நாட்களில் வழமைபோல் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் காலையில் இடம்பெறும் மத வழிபாடுகள் மற்றும் கூட்டங்களினால் வாரமொன்றில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவு குறைவடைகின்றமையால், அதனை மீள் நிரப்பும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவித்துள்ளார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.