Monday, April 11, 2011

சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவ நடவடிக்கை!

நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட உள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டொக்டர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.