Thursday, April 21, 2011

விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை

மே மாதம் முதல் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.