Thursday, November 17, 2011

1000 மர கன்றுகள் நடுகைத்திட்டம்




சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,இலங்கைத் திரு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தெயட்ட செவன(நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்) எனும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் 2011/11/17 ம் திகதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சம்மாந்துறை மஹல்லா முஅல்லா (மைய்யவாடி பள்ளி) யில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக,
            
    அல்ஹஜ்: A.M.M.NOWSHAD(தவிசாளர்,பிரதேச சபை,சம்மாந்துறை)
     ஜனாப்    : K.KALILUL RAHMAAN(உதவி தவிசாளர்,பிரதேச சபை, சம்மாந்துறை)
                       M. LASITH GAMAGA (மாவட்ட வனவல அதிகாரி)
                       M.A.JAYAA(வட்டார வனவல அதிகாரி)
  அல்ஹஜ் :I.ABDUL JABBARபிரதம நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)


ஆகியோரும் கலந்து கொன்டனர்.                                                          

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்ட மீறல் எட்டு மாதத்தில் 45 இலட்சம் ரூபா அறவீடு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்துச் சட்டங்களை மீறியோரிடமிருந்து 45 இலட்சம் ரூபா அதே இடத்தில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை பெறப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்காக அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகலவின் உத்தரவின் பேரில் வாகன போக்குவரத்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இத்தொகை தண்டப்பணமாகப் பெறப்பட்டுள்ளதுடன் வீதி விபத்துகளும் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர் இப்பிரதேசத்தில் தற்போது தலைக்கவசம் அணிவதும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்

இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பியதோடு ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.--



எச்சரிக்கை - உங்கள் பேஸ்புக்கை கண்காணிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள் போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. அண்மையில் பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, முகநூலில் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. பல உலகநாடுகளில் இருந்து, பல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்கள் யாவும் இஸ்ரேலிய அரசின் வசம் சென்றுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலிய அரசிடம் உள்ள, “விரும்பத் தகாத நபர்களின்” பட்டியலில் அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு 300 க்கும் அதிகமான சர்வதேச ஆர்வலர்களின் பெயர்கள், “கறுப்புப் பட்டியலில்” உள்ளன.

சமீபத்தில் இந்தப் பட்டியலில் உள்ள 65 நபர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது, திருப்பி அனுப்பப்பட்டனர். பிற “சந்தேக நபர்கள்” பற்றிய விபரங்கள், இஸ்ரேலுக்கு வரும் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அந்த நபர்களை கொண்டு வரும் விமானங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில், இஸ்ரேலுக்கு செல்லவிருந்த பயணிகள் பலர் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசின் வற்புறுத்தல் காரணமாகவே, தாம் அந்த நடவடிக்கை எடுத்தாக விமான நிறுவன முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய அரசின் கடும்போக்குக் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் அதிருப்தியாளர்கள் பெருகி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் கலக்கமடைந்த இஸ்ரேலிய அரசு, “பகிஸ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்தை” கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலிய இடதுசாரிகளால் “பாசிசமயமாக்கல்” என்று விமர்சிக்கப்பட்ட சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (கினேசெட்), பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் நஷ்டஈடு கோரலாம். வெளிநாடுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அமைப்பிடமோ, அல்லது தனிநபரிடமோ நஷ்டஈட்டை அறவிடலாம். இஸ்ரேலின் பாசிச சட்டத்திற்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஜனநாயக உலகில், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ளன.

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் - பேராசிரியர் பீரிஸ்

இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-

முஸ்லிம்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளனர். நாட்டில் குடியேற்றங்களை உருவாக்கிய அரபு வர்த்தகர்களுக்கு பெளத்த மன்னர்கள் காணிகளையும் புகலிடங்களையும் வழங்கியமை வரலாற்றுப் பதிவாகும். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் முஸ் லிம்கள் போர்த்துகீசராலும், ஒல்லாந்தர் களாலும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது மலையகத்தின் பெளத்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கு குடியிருப்புக்களையும், வசதிகளையும் வழங்கினர்.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். கலாநிதி ரி.பீ. ஜாயா, சேர் ராசீக் பரீத், ஏ. அஸஸ் போன்ற அரசியல் தலைவர்களின் பணிகள் மகத்தானவை.

சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு முஸ்லிம்கள் அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். முப்பது வருட பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இலங்கை அமைதியும், சமாதானமும் கண்டுள்ள ஒரு நிலையில் இம் மாநாடு இலங்கையில் நடப்பது பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு சகல வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப் பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தமது உரையில், இஸ்லாத்தின் உயரிய தத்துவங்கள் முழு உலகுக்கும் மகத்தான உதாரணங்களாகும். இன்று உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் என்றார்.

உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் செனட்டர் ராஜா முஹம்மத் ஸபருள்ஹக், சூடானின் முன்னாள் ஜனாதிபதி பீல்ட் மார்ஷல் அப்துல் ரஹ்மான் ஸொஸார் அல் டஹாப், உலக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் உமர் நப் ஆகியோரும் உரையாற்றினர்.
sources- yarlmuslim

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.