Friday, December 16, 2011

300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!





சீன அரசின் உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நெலும் பொகுன எனும் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் பிரதிப் பிரதமர் தலைமையிலான சீனத் தூதுக் குழுவொன்றும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டது.

இலங்கையில் இவ்வாறானதொரு கலையரங்கம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். 3.08பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கு சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் அண்டு இக்கட்டிடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதே வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜுலை மாதம் இதன் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி இலங்கை மக்களின் கண்ணீர் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிபிட்டார்.

GCE (A/L) பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் இழுபறி!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க ஆகியோர் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் அறிவித்தார்.

எனினும் அப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அவற்றை வெளியிடுவதற்கு மேலும் ஒரு வாரம் காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க மாற்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.