Wednesday, December 21, 2011

உயர்தர பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் சாத்தியம்!!

க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் நாளைய தினம் வெளியிடப்படலாம் என பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பரீட்சை முடிவுகளுக்கமைய வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனுமதிக்கு நேற்று  பல்கலைக்கழக  மானிய ஆணைக்குழு வுக்கு விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள்  தெரிவித்திருந்தன.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுச் சபையின் அனுமதி பெறப்பட்டதும் பெரும்பாலும் நாளை குறிப்பிட்ட பரீட்சை முடிவுகளை வெளியிடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாகவே இசட் புள்ளிகள் தயாரிக்கப்பட்டு வருவதனால் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களத்தினால் பல தடவைகள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 450 கிலோமீற்றர் வீதி கொங்றீட் வீதியாக புனரமைப்பு


இவ்
ஆண்டுகிழக்குமாகாணத்தில்450 கிலோமீற்றர்வீதிகொங்கிறீட்வீதியாக்அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது. இதேவேளைஎதிர்வரும்ஆண்டுபதினொராயிரத்துநூறுமில்லியன்ரூபாய்செலவில்750 கிலோமீற்றர்வீதிகொங்கிறீட்வீதியாகபுனரமைக்கப்படவுள்ளதாக' கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சர்எம்.எஸ்.உதுமாலெப்பைதெரிவித்தார். கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திதிணைக்களத்தின்வீதிஅபிவிருத்திமுன்னேற்றம்தொடர்பானவிசேடகலந்துரையாடல்மாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின்கேட்போர்கூடத்தில்இன்றுபுதன்கிழமைநடைபெற்றது. இதில்கலந்துகொண்டுஉரையாற்றும்போதேவீதிஅபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும்நிர்மாணமும், கிராமியமின்சாரம்மற்றும்நீர்வழங்கல்அமைச்சர், எம்.எஸ்.உதுமாலெப்பைஇவ்வாறுதெரிவித்தார் இங்குதொடர்ந்தும்உரையாற்றியஅவர்மேலும்தெரிவிக்கையில் கிழக்குமாகாணம்ஏனையமாகாணங்களைவவிடமுன்உதாரணமாகதிகழ்கின்றது ஏனெனில் கடந்த30 வருடயுத்தத்திலிருந்துஜனாதிபதியின்முயற்சியினால்இம்மாகாணம்விடுவிக்கப்பட்டுதற்போதுபல்வேறுஅபிவிருத்திதிட்டங்களைகிழக்குபெற்றுவருகின்றதுஎனதெரிவித்தார்இக்கலந்துரையாடலில்
.
கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திதிணைக்களஉயர்அதிகாரிகள்மற்றும்அமைச்சின்செயலாளர்கள்கலந்துகொண்டனர்

தென் கிழக்கு பல்கலைக்கு குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார். இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் நிதியம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபாவை குவைத் நிதியம் முன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு பல்கலைக்கழக நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர மற்றும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் ஆகியோர் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை, நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 பாலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். 1975ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்காக சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை குவைத் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.