Saturday, January 21, 2012

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில்அறிவித்துள்ளது.(எம்.ரி.-977)

தாமரைக் கோபுரத்துக்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று அடிக்கல் நடப்பட்டது!


கிழக்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்துக்கான அடிக்கல் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடப்பட்டது.

கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவூள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


“தாமரைக் கோபுரம”; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பல நோக்குக் கோபுரம் அமைக்கப்பட்டதும் இதன் மூலம் 50 ஒலிபரப்புச் சேவைகளுக்கும் 50 தொலைக் காட்சிச் சேவைகளுக்கும் 20 தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்குமான வசதிகளைக் கொண்டிருக்கும்.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்:
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி  இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினார்.(எம்.ரி.-977)

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.