Monday, February 13, 2012

மாபெரும் எழுச்சிச் சூறாவளி!...எதிர்பாருங்கள்!..

பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய  அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.‘மார்க்சிஸமும், முதலாளித்துவமும் மனித வரலாற்றில் மிகவும் சர்வாதிகார தன்மைகொண்ட ஆட்சி முறைகளாகும். மார்க்ஸிசம் முடிந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் சப்தம் உலகம் முழுவதும் கேட்கிறது’ – எனவும் நஜாத் கூறினார்.

அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது   மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.

மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் . மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். 
 qahtaninfo.blogspot.com

ஐந்து பிரி வினருக்கு எரிபொருள் மானியம் !

மக்கள் மீதான சுமையை குறைக்க விசேட நடவடிக்கை  -
எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க ஐந்து பிரிவினருக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள்  பாடசாலை  வேன் உரிமையாளர்கள்  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  கடற்றொழிலாளர்கள்  மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  NWES.LK

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.