Sunday, February 19, 2012

கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மீள் திருத்தத்தின் மூலமாக மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அம் மாணவரது விருப்பத்தின் படி பாடநெறி தெரிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. 

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 40,000இற்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது. 

விண்ணப்ப படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை காணப்படுமாயின் மாணவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்கலைப் பெறமுடியும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !

நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம்  -

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது.

ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.

25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். news.lk

வடக்கு கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம்.

நவடக்கு - கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கிடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி முனைப்பு எனும் தொனிப் பொருளின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லரிச்சல் 1ம்ää2ம் வீதிக்கான கொங்ரீட் பாதையும் வடிகான் அமைப்பத் திட்டத்தம் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக ரூபா: 1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் தலையில் இடம் பெற்றது. இதில் உதவிஉள்ளுராட்சி ஆனையாளர்: ஏ.ஜே.எம். இர்ஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
 kiyas jee

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.