Sunday, March 4, 2012

மாணவன் ஒருவர் தற்கொலை

இன்று சம்மாந்துறை மழையடிக்கிராமம் 02 பகுதியில் 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவத்தின் பின்னுள்ள விடயங்களை ஊகிக்க முடியாத நிலையில் தற்போது சம்மாந்துறை பொலிஸாரினால் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.                                           

2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

பூமிக்கு ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இவற்றில் சில அவர்களின் கணிப்பின் படி நடந்துள்ளதுடன், பல நடக்காமலும் போயுள்ளன.
எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், 2020 ஆம் ஆண்டு பூமியை சூரியப் புயல் தாக்கலாம் எனவும், இதற்கான வாய்ப்பு 8 இல் 1 ஆகக் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்படும் பாதிப்பினால் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு நட்டமேற்படுமெனவும், இதில் இருந்து மீள எமக்கு ஒரு தசாப்பதத்துக்கு மேல் தேவைப்படுமெனவும் குறிப்பிடுகின்றனர். இதே போன்ற புயலொன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியுள்ளது. இதன்போது தந்தி நிலையங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அவற்றின் வலையமைப்பும் பாதிக்கப்பட்டன.

இன்றைய இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் அத்தகையதொரு புயல் தாக்குமாயின் அதன் விளைவுகள் முன்னரை விடப் பல மடங்கு மோசமாக இருக்குமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது மின் சக்தி, வானொலி தொடர்பாடல், ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்களின் காலவரையறைகளை ஒப்பிட்டே இம்முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி , அபுதாபியிலிருந்து எண்ணெய் கொள்வனவுக்கு இலங்கை முயற்சி

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா  தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மசகு எண்ணெய் மற்றும் சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை  அதிகரிக்குமாறு சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளை சம்மதிக்கச் செய்ய முடியுமென இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பெற்றோலிய நிறுவனமான ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனி ஆகியனவற்றுடன் மேலதிக விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளுக்காக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் அடுத்தவாரம் இவ்விரு நாடுகளுக்கும் செல்லக்கூடும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு இவ்வருடம்  குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைவடையும் எனவும் இதனால் சர்வதேச சந்தையிலிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்குமதிக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம், 1.7 பில்லியன் டொலர் செலவில் 2 மில்லியன் தொன் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்தது.  அவற்றில் 1.93 மில்லியன் தொன் எண்ணெய் ஈரானிலிருந்து 1.6 பில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சந்தையின் கேள்விப்பத்திரங்களுக்கூடாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் எண்ணெயை இறக்குமதிக்கான  கடன் எல்லையை விஸ்தரிக்குமாறு அந்நிறுவனத்தை கோருவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓமானிடமிருந்தும் இலங்கை உதவிகளை கோரியுள்ளபோதிலும் அந்நாட்டிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானிய எண்ணெய் நெருக்கடியானது எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பாதிக்கவில்லை என அதன்  நிர்வாக இயக்குநர் கே.ஆர். சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகம் ரிலையன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தமது நிறுவனம் மிக அதிகமாக தங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 40,000 தொன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பொறுத்தவரை தட்டுப்பாடு இல்லை எனவும் அவர்கூறினார்.
tamilmirror

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.