Sunday, September 9, 2012

கிழக்கில் எக்கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது!


கிழக்கு மாகாணசபையின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட அதிகூடிய 14 ஆசங்களை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டணி பெற்றுள்ளது.
அம்பாறை- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  200044 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 193827 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132917 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 74901 வாக்குகளையும் தேசிய சுதந்திர முன்னணி 9522 வாக்குகளையும் பெற்றுள்ளது.

copy  news.lk

நாளை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டிய வேட்பாளர்களின் நேரடி வெற்றிக் கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு www.sammanthuraihotnews.blogspot.com

நாளை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டிய வேட்பாளர்களின் நேரடி வெற்றிக்
கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு
www.sammanthuraihotnews.blogspot.com

சம்மாந்துறை இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சம்மாந்துறை மண்ணில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய முஸ்லிம் காங்கிரஸ்
வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரம்
கூட்டமைப்பு வேட்பாளர் எம்.எல்.ஏ.அமீர் டீ.ஏ அவர்களையும் சம்மாந்துறை
இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர்களது அரசியல் நகர்வுகளை செய்திகளாக வழங்க எமது இணையத்தளம் காத்துக்
கொண்டிருக்கிறது.

ரவூப் ஹக்கீமை கலந்துரையாடலுக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

தம்முடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்
குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக
தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு
முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும்.
எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி
ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். TM

தீர்மானம் மேற்கொள்வதில் அவசரப்படமாட்டோம் - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப்பெற்றுள்ள
வாக்குகள் தமக்கு தோல்வியல்ல என தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது
முஸ்லிம்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின்
அடுத்தகட்ட நடவடிக்கை யாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன்
அலியிடன் யாழ் முஸ்லிம் வினவியது. இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட
அவர் கூறியதாவது,

இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள் அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கிடையேதான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
அம்பாறையில் நாம் தனித்து 4 நின்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். உண்மையில்
இதுதான் வெற்றி. திகாமடுல்ல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு 3
தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். அவர்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணம் பூராகவும் வாக்களித்தமக்களுக்கு நன்றி
சொல்கிறோம்.

மக்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடாகவே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தல்
முடிவுகளை நோக்குகிறது. மக்களின் தீர்மானத்திற்கமையவே எமது முடிவுகளும்
அமையும். இருந்தபோதும் எந்தக்கட்சி ஆட்சியமைக்க உதவுவது என்ற தீர்மானத்தை
அவசப்பட்டு மேற்கொள்ளமாட்டோம். முஸ்லிம் சமூகத்தை முதன்மைப்படுத்தியே
எமது திர்மானங்கள் அமையும்.

கிழக்கு மாகாண ஆட்சி மற்றும் முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பில் எந்தக்
கட்சியுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு நடாத்தும். நாங்கள் ஜனநாயக
கட்சி. அந்த அடிப்படையில் நாங்கள் இதற்கான உரிமையை பெற்றுள்ளோம்.

அத்துடன் நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள் ஒன்றுகூட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து
ஆராயவுள்ளதாகவும் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

15 முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு

இதுவரையிலும் வெளியாகியுள்ள விருப்பு வாக்குகளுக்கு அமைவாக கிழக்கு மாகாண
சபைக்கு தெரிவாகியுள்ள அம்பாறை ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட
மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளுடன் தருகிறோம்
திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா நான்கு என்ற
அடிப்படையில் மொத்தமாக 08 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 07 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதன்
பிரகாரம் மொத்தமாக 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர், அதேவேளை
தமிழ் பிரதிநிதிகள் மொத்தமாக 12 பேர் தெரிவாகியுள்ளனர், சிங்கள
பிரதிநிதிகள் மொத்தமாக 07 பேர் தெரிவாகியுள்ளனர் (போனஸ் ஆசனங்கள் பற்றிய
விபரம் இடத்தில் உள்ளடக்கப் படவில்லை)

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்.

அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726 -UPFA
ரம்ழான் அன்வர்- 10,904 -SLMC
ஹசன் மௌலவி- 10,123-SLMC
இம்ரான் மஹ்ரூப்- 10, 048-UNP

மட்டகளப்புமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .

அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி 21,271-UPFA
பொறியியலாளர் சிப்லி பாறூக் 20,407-UPFA
முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் – 19,303-UPFA
அஹமட் நசீர் செயினலாப்தீன் 11,401- SLMC

அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .

ஆதம்பாவா தவம், 32,330-SLMC
ஏ.எம்.ஜெமீல் 22,357-SLMC
ஐ.எம்.எம். மன்சூர் 21759-SLMC
ஏ.எல்.எம். நசீர் 18,327-SLMC
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033-UPFA
ஆரிப் சம்சுதீன் 19,680-UPFA
ஏ.எம்.அமீர் 19,671-UPFA

திருகோணமலை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்

இலங்கை தமிழரசுக் கட்சி
எஸ். தண்டாயுதபாணி- 20,850
குமார்சுவாமி நாகேஸ்வரன்- 10,910
ஜெஹதீஸன் ஜனார்த்தனன்- 8,560

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆரியவதி கலபதி- 14,224
பிரியந்த பத்திரன- 12,393
அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரம்ழான் அன்வர்- 10,904
ஹசன் மௌலவி- 10,123

ஐக்கிய தேசிய கட்சி
இம்ரான் மஹ்ரூப்- 10, 048

தேசிய சுதந்திர முன்னணி
ஜயந்த விஜயசேகர- 7,303

மட்டக்களப்பு மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்

இலங்கை தமிழரசுக் கட்சி
இரா. துரைரெத்தினம்- 29,148
கே. துரைராஜசிங்கம்- 27,719
ஞா.கிருஷ்ணபிள்ளை- 20,200
இந்திரகுமார் பிரசன்னா- 17,304
மா.நடராசா- 16,681
கோ.கருணாகரம்-16,536

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சிவனேசத்துரை சந்திரகாந்தன்- 22,338
அமைச்சர் எம்.எஸ்.அமீரலி- 21,271
சிப்லி பாரூக்- 20,407
எம்.எஸ்.சுபையிர்- 19,303

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹாபீஸ் நஷீட் அஹமட்- 11,401

அம்பாறை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

விமலவீர திசாநாயக்க 31815
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033
டி.வீரசிங்க 20,922
ஆரிப் சம்சுதீன் 19,680
ஏ.எம்.அமீர் 19,671

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதம்பாவா தவம், 32,330
ஏ.எம்.ஜெமீல் 22,357
ஐ.எம்.எம். மன்சூர் 21759
ஏ.எல்.எம். நசீர் 18,327

ஐக்கிய தேசிய கட்சி
யா கமகே 41,064
சந்திரதாஸ கலபதி 20,459

இலங்கை தமிழரசுக் கட்சி
தவராஜா கலையரசன் 12,122
ஐ. முருகேசு 10,812

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.