Monday, September 10, 2012

எந்தக் கூட்டமைப்புடன் கூட்டு? – ‘கிங் மேக்கர்’ முஸ்லிம் காங்கிரஸ்

 மாகாணசபைத் தேர்தலில் 7 ஆசனங்களை வென்று தீர்மானிக்கும் சக்தியாக
மாறியுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எந்தக் கட்சியுடன் கூட்டுச்
சேர்ந்து ஆட்சியமைக்கும் சக்தியாகத் திகழ்வது என்பது தொடர்பாக
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.14 ஆசனங்களை வென்று சாதாரண பெரும்பான்மைப்
 பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய சுதந்திர
 முன்னணி பெற்ற ஒரு ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன பலத்துடன் இருக்கிறது.இதேவேளை, 11 ஆசனங்களை வென்றுள்ள தமிழரசுக்
 கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய
தேசியக் கட்சியின் 4 ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன – சமபலத்துடன்
இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய
 மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா
கூட்டுச் சேரப்போகிறது என்பதைப் பொறுத்தே கிழக்கு மாகாணசபை ஆட்சி அமையும்
என்ற நிலை உருவாகியிருக்கிறது.கிழக்கு மாகாணத்தில் அதிக பேரம் பேசும் சக்தியை சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரசுக்கு வழங்கியிருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தை உச்ச அளவில்
பயன்படுத்துவதற்கு அந்தக் கட்சி முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது.முஸ்லிம் முதலமைச்சர், சிறுபான்மை
இனங்களைப் பாதிக்கும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்பது போன்ற
பிரதான நிபந்தனைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்து வருவதாக கட்சி
வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.எனினும், முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய
 மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பின்னடிப்பதாகவும், முஸ்லிம் பிரதிநிதி
ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக
இருப்பதாகவும், இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்தியில் மேலும் 2
அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், கிழக்கு மாகாண
முதலமைச்சர் பதவியை பிள்ளையான் அல்லது கருணா தரப்புக்கு வழங்குமாறு ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்வதால் கிடைக்கக்கூடிய முதலமைச்சர்
பதவியா? அல்லது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்வதால்
முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், மத்தியில் கிடைக்கக்கூடிய மேலதிக
அமைச்சுப் பதவிகளா என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ்
தள்ளப்பட்டிருக்கிறது.மேலதிகமாக, இந்த விடயத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அழுத்தங்களும்
பின்னணியில் செயற்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.முஸ்லிம் காங்கிரசின் பிரதான தளமாக
கிழக்கு மாகாணம் இ்ருந்தாலும், கிழக்குக்கு வெளியே நாட்டின் ஏனைய
பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நலன்கள் குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ்
கவனம் செலுத்தவேண்டிய தேவை இருப்பதால், கிழக்கு மாகாணசபை விடயத்தில் அது
எடுக்கும் முடிவு, தேசிய ரீதியாக அதற்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச நலன்களை
 அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்றும், இதில், மாகாண மற்றும்
சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்கள் தீர்மானிக்கும் விடயமாக இருக்க மாட்டாது
 எனவும், முஸ்லிம் காங்கிரசுடன் நெருக்கமான மூத்த ஊடகவியலாளர் ஒருவர்
தெரிவித்தார்.இதனடிப்படையில் பார்க்கும்போது,
தமிழரசுக்கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச சலுகையான
முஸ்லிம் முதலமைச்சர் பதவியை, மத்திய அரசுடன் பேரம் பேசக்கூடிய அதிகபட்ச
காரணியாகப் பயன்படுத்தி, மத்திய அரசிடம் கூடுதல் இலாபங்களைப் பெற்று,
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆட்சியமைப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது

பத்தாவது வெற்றித்தேர்தலாக வரலாற்றில் இடம்பெறும்!


நன்றி தெரிவித்து ஜனாதிபதி அறிக்கை!

ஜனநாயகத்தைப் பலப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இம்முறை தேர்தல் வெற்றி  மேலும் உந்துசக்தியாக அமைந்திருப்பதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் வெற்றி குறித்து நன்றி தெரிவித்து ஜனாதிபதி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி  வெளியிட்டுள்ள அந்த விசேட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-


இந்த கிழக்கு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.


இந்த தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடாத்தி சிறந்த ஒரு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்திற்கும் ஆளும்- எதிர்க்கட்சி சகல வேட்பாளர்களுக்கும்- பாதுகாப்பு தரப்பினருக்கும்-

விசேடமாக இந்த மாகாணங்களைச் சேர்ந்த சகல பொது மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.


சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை இந்தத் தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தியது . எனது தலைமையில் 2005ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் தேர்தலில் 10வது வெற்றியான இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.


தேசிய மக்கள் கருத்து கணிப்பாக இம்முறை நடைபெற்ற இந்த தேர்தல் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பலம் கிடைத்துள்ளது.


அதேபோன்று இனஇ, மத, குல, பேதங்களை காண்பித்து வெற்றியை எதிர்பார்த்திருந்த அனைத்து சக்திகளையும் தோல்வியடையச் செய்து, இலங்கையின் தேசம் மற்றும் அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.


ஒரு இலக்கை நோக்கி வெற்றிகரமாக நெருங்கக் கூடியதாக இருப்பது வெற்றியாளரைப் போன்று தோல்வியாளரும் இணைகின்ற போதே ஆகும். எனவே, நாடு எதிர்நோக்கும் சாவல்களின் போது பொறுப்புடனும் ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்."

ரவூப் ஹக்கீமுக்கு ஜனாதிபதி அழைப்பு!


தம்முடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர்- கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

copy news.lk

முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க வுடன் இணைவதற்கான உரிமை கோரல் கடிதம் சமர்ப்பிப்பு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (10.09.2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்க உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.