Tuesday, September 11, 2012

தீர்மானமின்றி கலைந்தது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம்!

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்த தரப்புடன் இணைந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்று இக்கூட்டம் இன்று மாலை ஏழு மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.

நாளை காலை மீண்டும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் நாயகம் உட்பட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிசாம் காரியப்பர் ஆகியோருடன் எஸ்.எச்.ஆதம்பாவா உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பணி நீக்கம் செய்தாலும் பகிஷ்கரிப்பு தொடரும்:பல்கலைக்கழக பேராசிரியர்கள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதலிப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக பதவிகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு அல்லது சிறைக்கு செல்லவும் தாம் தயார்

முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் பணிக்கு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அது பற்றி கவலைப்படப் போவதில்லை என சுமார் நான்காயிரம் பல்கலைக்கழக விரிவரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் மீது தன்னார்வ  மத்தியஸ்தத்தை  தொழில் ஆணையாளர் விதித்துள்ளார். மத்தியஸ்தர் ஒருவரை நாளை புதன்கிழமை நியமிக்குமாறு அவர் இச்சம்மேளனத்தை கோரியுள்ளார்.

கப்பல் துறைமுக அமைச்சினை தந்தால் கிழக்கில் அரசுக்கு ஆதரவு! ஹக்கீம்

கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் என உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பஷில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும்  விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல்

2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குதல்.

3. தனது கட்சியைச் சேர்ந்த நால்வருக்கு உயர்ஸ்தானிகர் பதவிகளை வழங்குதல்.

போன்ற முக்கிய கோரிக்கைகளையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.