Friday, September 14, 2012

கி.மா. சபை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஹக்கீமிடம்

கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை காலை விசேட கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதற்கமையாக, சில நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் கட்சி தலைவர் ஹக்கீம் பேச்சு நடத்துவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளருக்கு இன்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி வழங்கவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆட்சி அமைத்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாளை பேச்சு நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டத்தில் கட்சியின் ஒற்றுமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவான உலமாக்களினால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்-சம்மாந்துறையில் சம்பவம்


சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இரு பாடசாலை மாணவிகள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேசமயம் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.