Tuesday, September 18, 2012

சம்மாந்துறையில் தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள்

எதிர்வரும் 2012  ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களினால் போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி விபரங்கள்

கனிஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - அறிவுப் பசியின் உணவகம் நூலகம்
கட்டுரை- தலைப்பு - வாழும் காலமெல்லாம் வாசிப்பு ஒரு மனிதனுக்கு அவசியம்.


சிரேஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - “வாசகனாக இருந்து உன் உள்ளத்தில் நூலகம் ஒன்றைத் திறந்துவை“
கட்டுரை- தலைப்பு -“ பாமரனையும் பண்டிதனாக்கும் வாசிப்புக் கலை“

விதிமுறைகள்-
1. இப்போட்டிகளில் சம்மாந்துறை பிரதேச அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கனிஸ்ட மற்றும் சிரேஸட பிரிவு மாணவர்்கள் பங்கு பற்ற முடியும்.

2. கனிஸ்ட பிரிவில் தரம் 6-9 வரையான மாணவர்களும்
 சிரேஸ்ட பிரிவில் தரம் 10-13 வரையான மாணவர்களும் பங்கு பற்ற முடியும்.

3. கவிதைகள் அனைத்தும் 30 வரிகளைக் கொண்டவையாக அமைதல் வேண்டும்.

4. கனிஸ்ட பிரவிற்கான கட்டுரைகள் 250-300 சொற்களைக் கொண்டதாகவும் சிரேஸ்ட பிரிவிற்கான கட்டுரைகள் 750-800 சொற்களைக் கொண்டவையாக அருக்க வேண்டும்.

5. ஒரு மாணவர இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற முடியும்

6. போட்டியில் பங்கு பற்றி முதல் மூன்று நிலைகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கே பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

7. எழுத்துக்கள் தெளிவில்லாத விடத்து புள்ளிகள் குறைக்கப்படும்.

8. தொகுக்கப்படட உங்களது கவிதை, கட்டுரைகளுககு தனியான முன்பக்கம் ஒன்றை அமைத்து அம் முன்பக்கத்தில் உங்களது முழுப்பெயர், பாடசாலைச் சுட்டெண், கற்கும் தரம்,பாடசாலை பெயர் என்பன சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

 9 எதிர்வரும் 30.09.2012 ம் திகதிக்கு முன்னர் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு தபாலிலோ அல்லது நேரடியாகவோ
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை எனும் முகரிக்கு அனுப்பப்ட வேண்டும்.

10. குறித்த முடிவுத்திகதிக்கு பிந்தும் ஆவணங்களும், ஆக்கங்களும் நிராகரிக்கப்படும்.


தொடர்புகளுக்கு
யுஏ.ஆர்.எம்.இல்யாஸ்
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை
077-2382174
067-2260853





கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம்





கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.