Monday, September 24, 2012

இஸ்லாததிற்கு எதிரான திரைப்படத்திற்கு இலங்கையிலும் தடை


இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலானதாக தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு இலங்கை அரசாங்கமும்  எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அந்தவகையில்

எந்தவொரு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத விவகார பதில் அமைச்சர் என்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கண்டனத்திற்குள்ளான திரைப்படம் இலங்கையில் ஒளிபரப்பப்படுவதனை தவிர்க்கும் வகையிலான  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

இன்று(2012-09-25) வெளியாகிய 5ம்தர புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன அதன்படி
கொழும்பு 149
யாழ்ப்பாணம் 148
அமபாரை,மட்டு, திருகோணமலை -147
கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,பதுளை-146
நுவரெலியா,முல்லைத்தீவு 145
என அறிவிக்கப்பட்டுள்ளன


5ம் தர புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள வெளியாகியுள்ளன

2012ம் ஆனடுக்கான நடைபெற்று முடிநத 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரிடசைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன

பெறுபேறுகளை அறிந்து கொள்ள www.doenets.lk என்ற இணைய தளத்தை அணுகியோ அல்லது கைத்தொலைபேசிகளிலோ பெற்றுக் கொள்ளலாம்
கைத்தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ள
EXAMS இடைவெளி பரிட்சைச்சுட்டெண் என்பவற்றை எஸ்.எம.எஸ் அனுப்புங்கள்
Mobitel ஆயின் 8884
Dialog ஆயின் 7777
 Airtel ஆயின் 7545
Hutch ஆயின் 8888
Etisalath ஆயின் 3926 ற்கும்  எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்

அனைத்து மாணவரகளுக்கும் sammanthurai.tkசார்பாக வாழத்துக்கள்

கிழக்கு மாகாணசபை அமைச்சராக சம்மாந்துறை மன்சூர் பதவியேற்பு

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலை அடுத்து,  தெரிவு செய்யபபட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு இன்று (2012-09-24) இடம்பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சம்மாந்துறை எம்.ஐ.எம்.மன்சூர்  சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி,  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


மேலும் கிழக்கு மாகாண சபைக்கான 3 அமைச்சர்களும் பதவியேற்றனர்.  எம்.எஸ்.உதுமாலெப்பை  வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல்   அமைசசராகவும், விமலவீர திஸாநாயக்க கல்வி மற்றும் காணி அமைச்சராகவும்  ஹாபிஸ் நசீர்   விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள்   அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். எம். எஸ். உதுமாலெவ்வை விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சுப பதவிகளுக்கே மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.