Saturday, September 29, 2012

பு திதாக அதிபர், ஆசிரியர்கள் 6000 பேருக்கு அக்டோபர் 2ல் நியமனம்!

நாட்டிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றவென மேலும் 6000 அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவிக்கிறது.


இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகிய இரு தரப்பிர்களுக்கும் 3000 அதிபர்களும், இலங்கை ஆசிரியர் சேவை 3க்கு 3000 பட்டதாரி ஆசிரியர்களும் புதிதாக நியமனம் பெறவுள்ளனர்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் 3ஆம் தரத்திற்கு திறமை சேவை மூப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவான அதிபர் சேவை தரம்1ஐச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று பகுதியினருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கோட்டபாய யரட்ன அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது

உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் “இன்னஸன் ஒஃப் முஸ்லிம்ஸ்” என்னும் படத்தினை தயாரித்த நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சட்ட நிறுவனம் அதிகாரி டொம் முரோஸக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

“முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் படத்தினை தயாரித்து நெறிமுறைகளை மீறி அதனை இணையத்தில் வெளியீடு செய்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா (வயது 55) என்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபருக்கு பிணைவழங்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் கலகங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவே பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தினை சந்தேகநபர் செய்துள்ளதாகவும் நீதிபதி சுஸானி எச்.சீகல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.