Tuesday, October 2, 2012

தம்புள்ளைப் பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி


தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படுமென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 65 கட்டிடங்களை அகற்றுமாறு நகர அதிகார சபை அனுப்பிய கடிதம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பேச்சாளர் எம்.எச்.எம். ஹஸன் மீள்பார்வைக்கு அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவதுதம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புக்கள்இஸ்லாமிய இயக்கங்கள்அரசியல் பிரமுகர்கள்தனிமனிதர்கள் என்று பலரும் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் சம்பவமாக அதனை அரசாங்கமும் உணர்ந்திருப்பதாகச் செய்திகளும் வெளிவந்தன. இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரமுகர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
ஜெனீவாவில் இலங்கைக்குச் சார்பாக அறபு முஸ்லிம் நாடுகளை ஆர்வங் கொள்ளச் செய்யும் முயற்சியில் ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்கள் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலும் இந்த விடயம் ஊடகங்களில் பேசப்பட்டன. அந்த வகையில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான முழுப் பொறுப்பும் இப்போது அரசாங்கத்திடமேயுண்டு.
நபிகள் நாயகத்துக்கு எதிரான திரைப்படத்துக்கான எதிர் விளைவுகளைக் காட்டிய முஸ்லிம்களின் முன்னெடுப்புக்களின்போதும் முஸ்லிம்கள் சமய விவகாரங்களின்போது எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கண்டு கொண்டது. பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்களித்திருப்பதாகவே பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்களும்ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்களும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உறுதி வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆயுதமாக தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முன்னெடுக்கப்பட்டபோது கூட அரசாங்கம் முஸ்லிம்களுக்குச் சாதகமான பதிலையே கூறி வந்ததது.
இந்நிலையில் தம்புள்ளை நகரில் உள்ள 65 வீடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கிடையில் அகற்ற வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் மாத்தளைப் பிராந்திய முகாமையாளரும் ஒப்பமிடப்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 முஸ்லிம் வீடுகளும் அடங்கும். பள்ளிவாசலுக்கு இத்தகைய ஒரு கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் பள்ளிவாசலுக்கு ஆபத்தில்லை என்று கூறியிருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி கூறியிருந்தாலும் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் பாரதூரமானவை என்றே நம்பப்படுகிறது.
மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்வீதி மறியல்கள் என்றில்லாமல் முஸ்லிம் புத்திஜீவிகள்அரசியல்,சமூகத் தலைவர்கள் அரசின் உயர் பீடத்தைச் சந்தித்து உத்தியோகபூர்வமான உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
அதன் பின்னரே அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும். இப்பணி அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

thanks.meelparvai

திவிநெகும சட்டமூலத்தை விரிவாக ஆராய்வதற்கு கால அவகாசம் கோரவுள்ளதாக மு.கா. அறிவிப்பு

திவிநெகும சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு ௭டுத்துக் கொள்ளப்படும்போது குறித்த சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான கால அவகாசத்தைக் கோரவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி (௭ம்.பி) தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இச் சட்டமூலத்தில் அடங்கியுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவு ஒன்றை ௭டுப்பதற்கோ அல்லது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கோ ௭மக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
மூன்று தினங்களுக்கு முன்னர்தான் ௭மக்கு குறித்த சட்டமூலத்தின் பிரதி கிடைக்கப்பெற்றது. அதனால் இக் குறுகிய காலப்பகுதிக்குள் அதில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய முடியாது. அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைப் பொறுத்தவரை அவசரப்பட்டு முடிவுகளை ௭டுக்க முடியாது.
௭னவேதான் திவிநெகும சட்ட மூலத்திலும் ௭மது கட்சி அவசரப்பட்டு முடிவெடுக்காது ௭ன்றார்.

meelparvai

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வு குறித்து அமைச்சர் ஹகீம் பேச்சு

அரசியலமைப்புச் சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையின் ஊடாக நன்கு வெளிப்படுத் தப்பட்டிருப்பதாக நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹகீம், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரி்க்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய நீதியமைச்சர் ஹகீம், நியுயோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகத்தில் திங்கள் கிழமை (01.10.2012) காலை திரு. பிளேக்குடன் தனியாக நடத்திய கலந்துரையாடலின்போது இதனைச்  சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் திரு. பிளேக்குடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஹகீமுக்கும், உதவி இராஜாங்க செயலாளர் பிளேக்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வின் அவசியம், கிழக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய அமெரிக்கத் திரைப்படம் என்பனவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.
மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே தாம் அரசாங்கத் தரப்பினருடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனும், முஸ்லிம் காங்கிரஸிற்குக் கிடைத்த பேரம் பேசும் சக்தியினூடாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின்போது நாட்டில் வாழும் சகல சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்க மொன்றின் அவசியத்தை வலுயுறுத்திய போதிலும் இருதரப்பினரும் அதில் உரிய கவனம் செலுத்தவில்லை யென்றும், அந்த பின்னணியில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை பொதுவாக நாட்டினதும், குறிப்பாக தமது சமூகத்தினதும் நலன் கருதி கிழக்கு மாகாண சபை ஆட்சியை நிறுவுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அமைச்சர் ஹகீம் கூறினார்.
இனப் பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உள்வாங்குவதன் ஊடாக இதுவரை காலமும் தீர்வு காணப்படாத பல்வேறு அம்சங்கள் மீது உரிய கவனத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹகீம், இனிமேல் நடைபெறும் இனப் பிரச்சினையோடு தொடர்பான எத்தகைய பேச்சு வார்த்தைகளிலும் முஸ்லிம் தரப்பும் தனியாக பங்குபற்ற வழிவகுக்கப்பட வேண்டு மென்றும், விடுதலைப் புலிகளைப் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித் தரப்பாக பங்கு பற்றுவதற்கு இணங்காதிருப்பதாகவும், கூட்டமைப்பினர் தாம் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலா மென்றும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து கதைக்கலா மென்றும் கூறிவருவதாகவும் அது நன்மை பயக்கவோ, பலனளிக்கவோ மாட்டா தென்றும் சொன்னார்.
மீள்குடியேற்றம்
இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார, பாதுகாப்பு விடயங்கள் பற்றியும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹகீம் எடுத்துரைத்தார். மன்னார் கோந்தபிட்டி விவகாரம் புதாகாரமாக உருவெடுப்பதற்கு வழிகோலிய காரணிகளையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் கூறினார்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் நிலபுலன்கள் தொடர்பான சிக்கல்களையும், நெருக்கடிகளையும் பற்றி தெரிவித்த அமைச்சர் ஹகீம், தமது சொந்தக் காணிகளை யுத்தம் நிலவிய காலத்தில் பறிகொடுத்த மக்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கு வழிவகுக்கும் சட்டத்தை அமுலாக்க விருப்பதாகவும் கூறினார்.
தடுப்புக் காவலில் உள்ள தமிழ் சிறைக்கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேலும் தாமதமின்றி மேற்கொண்டு குற்றமற்றவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் நீதியமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டு வருவதாகவும் திரு. பிளேக் தொடுத்த கேள்வி யொன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹகீம் கூறினார். பிரத்தியேகமான மேல் நீதி மன்றங்களினூடாக அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படு மென்றார்.
நபிகள் நாயகம் அவமதிப்புபற்றி
அமெரிக்காவில், கலிபோர்ணியாவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கும் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் நாடுகளில் மக்களின் மனங்களை புண்படுத்தி, அவர்களை அதற்கெதிராக கிளர்ந்தெழச் செய்துள்ளது பற்றி உதவி இராஜாங்க செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் ஹகீம், இஸ்லாத்தைப் பற்றியும், அதன் இறுதித் திருத்தூதர் பற்றியும் வேண்டு மென்றே திட்டமிட்டு இவ்வாறான அபாண்டங்களும் அவதூறுகளும் மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்களால் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இவ்வாறான இழி செயல்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசாங்கமும், ஏனைய மேற்கு நாடுகளும் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மிகவும் பாரதூரமானதாகி விடுமென்றும் கூறியதோடு, பேச்சு சுதந்திரம் என்ற காரணத்தைக் காட்டி எந்தவொரு சமயத்தையோ, சமயத் தலைவரையோ நிந்திப்பதையோ, அவமதிப்பதையோ அச் சமயங்களை பின்பற்றுவோர் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலகிற்கும், இஸ்லாமிய உலகிற்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான வழிவகைளை காண வேண்டும் என அமைச்சர் ஹகீம் தெரிவித்தபோது, அதற்கான சிறந்த ஆலோசனைகளை முன்வைக்குமாறும், அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியுமென்றும் திரு. பிளேக் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் ஹகீமுடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சர் டளஸ் அளகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜென்ரல் சவீந்திரடி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

meelparvai

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு!

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு  01/10/2012 காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.

சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது.

இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது. 

news.lk

முதியவர்களின் மலம்-சிறுநீர் சுத்தப்படுத்தும் புதிய கருவி!

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத வயதானவர்கள் சிறுநீர்- மலம் கழித்தால் உடனே கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடும் தானியங்கி கருவியொன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயன்படும் கருவிகளை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள்- தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச கண்காட்சி நடந்தது.

இதில்இ ‘மசில்கார்ப்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரோபோ ஹெல்ப்பர் லவ்’ என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள்- முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர்- மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும்.

சிறுநீர்- மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால்- உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு- வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.