Tuesday, October 9, 2012

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையிலும் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அதன் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறும் கோரினர்.

thanks  tamilmirror

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி!

ஜெயலலிதாவின் ஆட்சேப மனு நிராகரிப்பு!
இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செய்த ஆட்சேப மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதற்கு முன்னர் ஊட்டிக்கு அருகில் உள்ள
வெலிங்டனில் இருக்கும் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களுக்கான கல்லூரியில் இரண்டு இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தற்போது அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் உடனடியாக இந்தியாவில் பயிற்சி பெறும் இரண்டு
இலங்கையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டிருந்தார். தன்னுடைய மாநில அரசாங்கத்திற்கு தெரியால் வேண்டுமென்றே இவ்விதம் பயிற்சியளிக்கும் தகவல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் ஜெயலலிதா இந்த கடிதத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாடு அரசாங்கத்தை பொருட்படுத்தாத வகையில் இந்திய மத்திய அரசாங்கம் இவ்விரு இலங்கை இராணுவ பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளித்திருப்பதுகண்டனத்திற்குரிய செயல் என்றும் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னைக்கு அருகில் உள்ள தாம்புரம் விமான தளத்தில்
9 இலங்கைவிமானப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


thanks news.lk

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.