Monday, October 15, 2012

மீண்டும் இயற்கையில் இறைநாமமா?

இன்று அதிகாலை (2012-10-16) சம்மாந்துறை அஸ்ஸாலிஹாத் பெண்கள் அறபிக் கல்லூரியில் தக்காளிப்பழமொன்றை வெட்டிய போது அதில் அரபு எழுத்துக்களில் அல்லாஹ் என்றிருப்பதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து குறிப்பிட்ட தக்காளிப் பழத்தினுடைய புகைப்படத்தினை எடுத்தனர்.
இது பற்றி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , இன்று காலை கலை ஆகாரத்திற்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமைத்துக் கொண்டிருந்த மாணவிகளே இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி இறைச்சியில் இதேபோன்று தோற்றமளித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததும். இன்று ஒக்டோபர் 16 திகதி அதாவது 30 நாட்களுக்குப்பின் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் உண்மைகள் புலம்பும் போது தகவல்கள் வெளிவரும்.

உலக கைகழுவுதல் தினக் கொண்டாட்டம்

நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரிக்கும் போது அவனது சிந்தனைகளும் தேவைக்கேற்றாற் போல் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும். இன்று பல்வேறு நோக்கங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் பல நாட்களை முக்கியப்படுத்தும் நோக்கோடு அவைகளை சர்வதேச தினங்களாக மாற்றி அதன் தேவை மக்கள் மத்தியில் புரிய வைக்க கையாளும் ஒரு யுக்தி தான் இந்த சர்வதேச தினங்களாகும்.

அந்த வகையில் இன்று 15.10.2012 ஆந் திகதியன்று உலக கைகழுவுதல் தினமாகும். அதனை சிறப்பாகவும், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் கொண்டாடுமுகமாகவும். ஐக்கிய நாடுகளின் யுனிசேப் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை மட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றது என நான் சொன்னால் அது மிகையாகாது.

இந்த வகையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தங்களுடைய மாணவ சமூதாயத்திற்கு இந்த தினத்தை நினைவு கூறும் நிகழ்வும் வித்தியாலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதார பரீசோதகர் ஏ.எம். றம்ஸான் கலந்து கொண்டதோடு அந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

இந்த நிகழ்வை இப்பாடசாலை சுகாதாரக்கழகம் ஏற்பாடு செய்தது இதற்கு வழிகாட்டியாக இப்பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியை திருமதி வை. அமிர்தசங்கர் ஒத்துழைப்பு வழங்கியதோடு, இ்ந்நிகழ்வு சிறப்பாக நடைபெற இப்பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு வகிக்கும் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்ற அறிவுறுத்தல் பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அவர்களால் சிறப்பாக செய்து காட்டப்பட்டதோடு மாணவர்களும் அதில் கலந்து சிறந்த பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்கள் என இங்கு குறிப்பிட வேண்டும்.

தகவல் ஏ.எம். தாஹா நழீம்

முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை தற்போது ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் - அமைச்சர் ALM அதாஉல்லாஹ்




முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை தற்போது ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள்
(சுலைமான் றாபி நிந்தவூர்)

அரசியல் அதிகாரம் இல்லாத ஊர்களுக்கு அதனைபெற்றுகொடுக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கிலே தற்போது தேசிய காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும்  முஸ்லிம்களின்  உரிமைகளை பேசி, இனவாதத்தினை கக்கி, மக்களின் வாக்குகளை சூறையாடிக்கொண்டு  தற்போது வீடுகளிலும், ஹோட்டல்களிலும் முடங்கிக் கிடக்கும் அரசியல் தலைமைகளை மக்கள் கண்டுனர்த்திருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் தேசிய காங்கிரசும்   அதன் தலைமையையும் "முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுத்தவர்கள்" என கூறினார்கள். ஆனால்  இந்த நிலை மாறி  தற்போது முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சரும், தேசிய காங்கிரஸ்  தலைவருமான  அமைச்சர் ALM அதாஉல்லாஹ்  நேற்றைய தினம் (14 .10 .2012 ) ஞாயிறுக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்ற "உத்தமருக்கு உன்னத மரியாதை" வரவேட்புக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

நமது நாட்டில் முறையான சுதந்திரமான அரசியல் தலைமைகளை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு பல கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு திரிகின்றன. ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. இதனாலேயே அவர்கள் வெல்வது போன்றும், உண்மை தோற்பது போன்றும் தெரிகின்றது. ஆனால் கடைசியில் உண்மை தோற்றும் வெற்றி பெறுகின்றது. கடந்த மாகாண சபைதேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அதன் கூஜாத்தூக்கிகளும் மக்கள் மத்தியில் இனவாத உணர்ச்சி அலைகளை கிளப்பி இருந்தார்கள். இதனால் அறுபதாயிரம் வாக்கு வரை முடங்கியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் சுமார் எண்பதாயிரம் வாக்குகளை மக்களை ஏமாற்றி பெற்றிருந்தார்கள். அன்று பள்ளிக்கு இடுகின்ற காணிக்கையாக ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை அளித்து தங்கள் உணர்ச்சியினை காட்டியிருந்தார்கள் ஆனால் இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த சுமார் இருபதாயிரம் வாக்காளர்களும், கிழக்கு மாகாண ஒட்டு மொத்த சமூகமும் வென்றும் தோல்வியடைந்த நிலையிலே வாழ்கின்றார்கள். மேலும் இதில் இரண்டு விடயங்களை உள்வாங்கியிருந்தார்கள். 
1) முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் 
2 ) பள்ளி வாசல் உடைப்புக்களில் அரசாங்கத்தை எதிர்த்தல் என்பனவாகும். 

ஆனால் இவை இரண்டும் இன்று பொட்டிப்பாம்பாக மாறிவிட்டது. மேலும் தேர்தல் காலங்களில்  மு.கா ஊர்துவேசத்தினால் அந்தந்த ஊர்களில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் அந்தந்த ஊர்களுக்குள்ளே பழி தீர்க்க வைத்து திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள் ,  இப்படியான விடயங்களை தேசிய காங்கிரஸ் ஒரு போதும் செய்ய வில்லை. உண்மையை பேசி உண்மை சொல்கின்றவர்கள் நாங்கள் அதனால்தான் ஒவ்வொரு தேர்தலின் பின்பும் மக்கள் மத்தியில் நாங்கள் கூச்சப்படாமல் பேசுகின்றோம், ஆனால் இந்நிலை மாறி இன்று அரசின் கால்களில் மண்டியிட்டுக்கிடக்கின்றார்கள். 

தமிழ் மக்களை ஏமாற்றும் சதி எமக்கில்லை இந்த மாகாண சபைத்தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளும்  தமிழ் மக்களும்  ஏமாற்றபட்டிருக்கிறார்கள். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்தால்  நிச்சயம் முஸ்லிம் காங்கிரசிற்கு   முதலமைச்சர் பதவி கிடைத்து விடும் அப்படி கிடைத்தால் தனது தலைமைத்துவத்திற்கு ஆப்பு விழுந்து விடும் என்றஞ்சி சுதந்திர கட்சியை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே இந்த கபட நாடகத்திற்கு மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு அல்லாஹ்வின் ஹுக்கூம் கிடைத்தே தீரும், இன்ஷா அல்லாஹ் தேசிய காங்கிரசையும்  அதன் தலைமைத்துவத்தையும் மக்கள் ஏற்கும் காலம் வரும் அப்போது நாம் அனைவரும் நமது சமூகத்தை  விடிவுப்பயணதிற்கு இட்டுச்செல்வோம் எனக்குறிப்பிட்டார். 

இந்தக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் MS உதுமாலெப்பை,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப்  சம்சுதீன், MLA அமீர் ஆகியோர் உட்பட பலரும்  கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். 


சுலைமான் றாபி நிந்தவூர் 
skype : raafislm



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.