Monday, October 22, 2012

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி!


இவ்வாண்டின் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்



நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்

இந்த பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னோடி கருத்தரங்குகளை நடத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருத்தரங்குகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி முதல்  25ஆம்திகதி வரை சகல பாடசாலைகளிலும் நடத்தப்படும் எனவும் அதற்கான செயல்முறை விளக்கம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார் .


இதேவேளை,இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 5,37,393 பேர் தோற்றுவதாகவும் இதில் 1லட்சத்து 50,968 பேர் பாடசாலை மட்டத்தில் தோற்றுபவர்கள் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.


மூன்று லட்சத்து 20ஆயிரம் பேர் இப்பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

26ஆம் திகதிய அரச விடுமுறை ரத்து!


எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.


26ஆம் திகதி அரசாங்க ,வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் முஸ்லீம்களின் 'ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப்பெருநாள் 27ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்கமிட்டி கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 26ஆம் திகதிய அரச விடுமுறைரத்துச்செய்யப்பட்டுள்ளது.


எனினும்  ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகிய  27ஆம் திகதி சனிக்கிழமை  அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாகபிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.

அவசியம் ஏற்பட்டாடல் கருத்துக்கணிப்பு நடத்துவோம்!


-அமைச்சர் பசில் ராஜபக்ஷ தகவல்-
திவிநெகும சட்டமூலத்துக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள். அவசயம் ஏற்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்;தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது-

திவிநெகும சட்டமூலத்துக்கு இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே இன்று முக்கிய தடையாக இருக்கின்றனர். தமது அரச விரோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வடபகுதி பொது மக்களையே இவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
சமுர்தி மற்றும் திவிநெகும தி;ட்டங்கள் மூலம் வட பகுதி வரிய மக்கள் அடையப்போகும் நன்மைகளை இவர்கள் தடுக்கின்றனர்.

2001 முதல் 2004 ஆண்டு காலப் பகுதியில் இவர்கள் புலிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் நுழைந்தனர். எனவே பொது மக்களுக்கு புலிகள் நன்மை செய்தாலும் தீமைகள் செய்தாலும் அவற்றின் முழுப்பொறுப்பையூம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே ஏற்கவேண்டும்.

வட பகுதி மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய அடிப்படை வசதிகளை புலிகள் அழித்தனர். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகளை இவர்கள் நிர்மூலமாக்கினர். தொழிற்சாலைகளை தகர்த்தனர். இறுதியாக மக்களின் உயிர்களையூம் பறித்தனர்.

சமுர்தித் திட்டம் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த வருடம் வரையில் வடக்கில் அது செயற்படவில்லை. கிளிநொச்சி- மன்னார் - முல்லைத் தீவூ ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தித் திட்டம் செயல்படவில்லை. அன்று புலிகள் என்ன செய்தார்களோ அதனையே இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்கின்றனர்.

வட பகுதி மக்களின் முக்கிய பிரச்சினை தீர்க்க அரசாங்கம் "பிம் சவிய' திட்டத்தை முன்வைத்தது. எனினும் அத்திட்டத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் அத்திட்டம் முடக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து சுமார் 60 வருடங்களில் கிடைக்காத அடிப்டை வசதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைiயிலான அரசாங்கம் வட பகுதி மக்களுக்கு வழங்கியது. புலிகள் இல்லாதொழித்த வசதிகளையூம் அதற்கு மேலான வசதிகளையூம் இன்றை அரசு செய்துள்ளதுஇ

ஆனால் அடிக்கடி வெளிநாடு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு பொய்களைக் கூறி அரசின் நல்ல திட்டங்களைத் தாமதப்டுத்துகின்றனர்.

வெளிநாடுகள் இலங்கைக்கு வழங்கும் கடன் உதவிகள் மறறும் உதவிகளைத் தடுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இலங்கைக்கு உதவி வழங்குங்கள் என்று அவர்கள் ஒருபோதும் வெளிநாடுகளிடம் இதுவரைக் கோரிக்கை விடவில்லை.

வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே நாம் திவி நெகும் திட்டத்தை முன்னெடுக்கிறௌம். மாகாணசபை அதிகாரங்களில் நடவடிக்கைகளில் நாம் தலையிட மாட்டோம். தமிழ் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நிருவாக முறையொன்றை அவர்களுக்கு நாம் வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார். 

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பம்!


ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்த கூட்டத் தொடர் அரசாங்கத்திற்கு எந்தவொரு வகையிலும் பாதகமாக அமையாது என  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.


யு.பி.ஆர். எனப்படும் சர்வதேச தவணைமுறை மீளாய்வுக் கூட்டத் தொடரில் நவம்பர் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலான கலந்தாலோசிப்புகள் இடம்பெறும்.


இக்கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொள்வதுடன் இவருக்கு மேலதிகமாக விசேட குழுவொன்று ஜெனீவா செல்ல தயாராகவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகள் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்படி யு.பி.ஆர். கூட்டத் தொடருக்கு சமுகம் அளிப்பது வழக்கம். அந்த வகையிலேயே எமது இலங்கை அரசாங்கம் சார்பிலான பிரதிநிதிகளும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் வகையில் ஜெனீவா நோக்கி பயணம் செய்யவுள்ளனர்.

இக்கூட்டத் தொடர் குறித்த சரியான விளக்கம் கொண்டிராத பல்வேறு ஊடகங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கப் பிரதிநிதிகளை வரவழைத்திருப்பதாகவும் இதனால் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவிருப்பதாகவும் தவறான செய்திகளை பிரசுரித்து வருகின்றன. இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் செயலாளர் அமுனுகம மறுப்புத் தெரிவித்தார்.


யு.பி.ஆர். கூட்டத் தொடர் என்பது ஐ.நா. உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகளுக்கு ஒரு பரீட்சை போன்றதென்றே கூறலாம். இலங்கை இரண்டாவது தடவையாகவே எதிர்வரும் முதலாம் திகதி இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்கிறது.


நீதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்குடியமர்வு புனர்வாழ்வு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இக்கூட்டத் தொடரில் தங்களது துறை சார்பில் விளக்கமளிப்பர்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் நோக்கிய எமது பாதையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் இது எமக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.


மேலும் இக்கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாதென சுட்டிக்காட்டிய அவர் ,தற்போது இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் ஆகியன தெளிவுபடுத்தப் பட்டுள்ளமையினால் இக்கூட்டத் தொடரில் பாரிய சிக்கல்கள் எதுவும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இலங்கை இதில் கலந்து கொள்வது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் கூறினார். 

உலக சக்தி மாநாட்டில் ஜனாதிபதி உரை!



உலக சக்தி மாநாடு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறுகின்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ- வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோர் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.

நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை


நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகக் கிடைக்கும் அதிகளவு முறைப்பாடுகளே இதற்குக் காரணமாகும். அங்குள்ள நிர்வாகத்தினர் இதனை பெருமளவு அலட்சியப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சில சம்பவங்களில் வார்த்தையளவிலும் உணர்ச்சிகரமாகவும் பௌதீக ரீதியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதாக அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு போதுமான தராதரங்களோ, விதிகளோ இல்லாமை இந்நிலையை மேலும் தூண்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை நிர்வகிப்பதற்கான பலமான சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. யாரிடம் பொருளாதார ரீதியாக அதற்கான இயலுமை இருக்கிறதோ அவர்களே இதனைத் தொடங்குகின்றனர். இப்பாடசாலைகளில் சிறுவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளும் காணப்படுவதில்லை. அத்துடன் ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விதிகளையும் பிரமாணங்களையும் தயாரிப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட அதிகார சபை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


(நன்றி மீள்பார்வை)

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.