Wednesday, October 31, 2012

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சுமார் 200,000 தாதியருக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் இதனால் வெளிவாரி பட்டப்படிப்பிற்கான அனுமதியினை மட்டுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாளியை கொலை செய்து மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றம்......

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றப்படுகிறது. இது வரையும் சில வானொலிகள் 5 வரையான அலைவரிசைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக புதிய வானொலிகளுக்கு அலைவரிசைகளை ஒதுக்கமுடியவில்லை.

அத்துடன் பல வானொலிகளின் நிகழச்சிகளுக்கு தடைகளையும் ஏற்படுத்தின. இதன் காரணமாக நாளை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவால் ஒரு வானொலிக்கு இரு அலைவரிசை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கேட்கும் சில தமிழ் வானொலிகளும் புதிய அலைவரிசைகளும்

சூரியன் எப்.எம்-- 103.4 MHz மற்றும் 103.6 MHz

சக்தி எப்.எம்-- 103.9 MHz மற்றும் 104.1 MHz

வெற்றி எப்.எம்-- 90.4MHz மற்றும் 90.6 MHz

வசந்தம் எப்.எம்-- 102.6 மற்றும் 102.8 MHz

அலை எப்.எம்-- 91.4

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.