Saturday, November 17, 2012

செம்மழை மர்மம் துலக்கம்

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.

கடந்த வாரத்தில் இதேபோல பல பகுதிகளில் 'செம்மழை' பெய்திருக்கிறது. இந்த மழை நீர் பட்டிருக்கும் இடங்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன.

வீட்டின் கூரைகள், மரங்களின் இலைகளில் பொதுமக்களின் உடைகளிலும் இந்த செந்நிறத் திட்டு படிந்திருப்பதால் ‘ரத்தக் கறை' போல் காணப்படுகிறது.

இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும்  இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
இது பற்றி வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் 
ட்ராகோலேமொனாஸ்’ எனப்படும் நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செம்மழையில் நனைந்தால் அது பொதுமக்களுக்கு தீங்கை உண்டாக்காத நுண்ணுயிர் என்று அறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும், கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.
இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.