Sunday, November 18, 2012

இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி சென்ற வெள்ளிக்கிழமை முதன் முறையாக உலகப் புகழ்பெற்ற ஜாமிஉல்-அஸ்ஹரில் (அல்-அஸ்ஹர் பள்ளிவாசல்) ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தினார். “உலகின் முன்னணி பள்ளிவாசல்கள் பலவற்றில் நான் பேசி இருக்கிறேன். ஆனால், அல்-அஸ்ஹரில் பேசுவது இதுவே முதல் முறை“ என அவர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்போது, காஸாவில் தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதலை கண்டித்தமைக்காக எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கும் கட்டார் நாட்டுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவர் இப்பேருரையில் வன்மையாகக் கண்டித்தார். “கொல்லப்படும் அளவுக்கு காஸா மக்கள் என்னதான் செய்தார்கள்?. இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு. வரலாறு முழுவதும் அது அதனையே செய்து வந்திருக்கிறது“ எனவும் அவர் சாடினார்.

சிரிய மக்களுக்கு எதிராக பஷார் அல் அஸத் செய்யும் கொடுமைகளையும் அவர் கண்டித்துப் பேசினார்.

உலக இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியத்தின் தலைவராக கர்ளாவி உள்ளார். ஜமால் அப்துன் நாஸரின் காலத்தில் எகிப்தில் இருந்து வெளியேறிய அவர் கட்டாரில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

2011 ஜனவரி 25 புரட்சியின் காரணமாக முபாறக் வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், தஹ்ரீர் சதுக்கத்தில் கர்ளாவி குத்பாவை (வெள்ளிக்கிழமை நிகழ்த்தும் மார்க்க உரை) நிகழ்த்தினார். இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்ளாவி 1926 இல் எகிப்தில் பிறந்தார். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அவர், இன்று சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞராகத் திகழ்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டும், அவர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று இன்று 8 ஆவது வருடமாவதை முன்னிட்டும் நாட்டின் பல பகுதிகளில் விசேட நிகழ்வுகளும் மரநடுகை நிகழ்வுகளும்  முதியோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா

காஸாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தன்னைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“தனது மக்களை நோக்கி ஏவுகணைகள் மழைபோல் வந்து தாக்கும்போது, உலகில் உள்ள எந்த நாடும் அதை சகித்துக் கொள்ளாது. தன்னைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாம் முழு மனதாக ஆதரிக்கிறோம்“ என அவர் தெரிவித்துள்ளார். அவர் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின்போது தாய்லாந்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் தரைவழியாக காஸாவை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும், எகிப்து இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

நன்றி (மீள்பார்வை)

இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி

இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு, துருக்கிய பிரதமர் ரஜப் தய்யிப் அர்தூகான் பலமான செய்தி ஒன்றை விடுத்துள்ளார். 2012 இன் நிலமைகள் 2008 இலிருந்து பல வகையில் மாறுபட்டிருக்கிறது என்பதே அந்த செய்தியாகும்.
2008 இல் தேர்தலுக்கு முன்னர், இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கியது. இப்போது மீண்டும் தேர்தல் வந்துள்ளது. இஸ்ரேல் அதையே மீண்டும் செய்கிறது என எகிப்தில் இடம்பெற்ற துருக்கி - எகிப்திய வர்த்தக மன்றத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைக் குரூரமாகக் கொல்வதில் இஸ்ரேல் மிகவும் மோசமாக உள்ளது. அந்நாடு துருக்கிக்கும் இதையே செய்தது. காஸாவுக்கு மனிதாபிமான உதவியைக் கொண்டு சென்ற மாவி மர்மரா கப்பலில் பயணித்த 9 துருக்கிய பிரஜைகளை சர்வதேச கடலில் வைத்து அவர்கள் கொன்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் லாவோஸில் இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு இதனையே சொன்னேன்: சிறுவர்களை எப்படிக் கொல்வது என்பது இஸ்ரேலுக்கு நன்கு தெரியும். முறையற்ற விதத்தில் இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

2008 இல் 1500 பேரைக் கொன்றதோடு, அவர்கள் 5000 பேரைக் காயப்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேல் இந்த தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரேலும் காஸாவும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   
பலஸ்தீன – இஸ்ரேலிய விவகாரத்தைத் தீர்ப்பதில் அரசியலுக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்கும் மட்டும் சம்பந்தம் இல்லை. பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு என்பவற்றுடனும் இது தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்

தான் காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி- எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர் தெரிவித்துள்ளார்

 

நன்றி மீள்பார்வை

நபிகளாரின் வரலாறு(ஸீறா) விஷேட சொற்பொழிவு

இறுதி நபி உத்தமத் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினடைய வரலாறு பற்றிய விஷேட சொற்பொழிவு இம்மாதம்(நவம்பர்2012) 23,24,25ம் திகதிகளில் சம்மாந்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.