Wednesday, December 26, 2012

சுனாமி சுழன்று எட்டு- பின்னால் சில எட்டுக்கள்




கடந்த 2004-டிசம்பர் -26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அமைதியான அதிகாலை அமைதியான பொழுது உலகையே ஒருமுறை உசுப்பி விட்டது.  இந்தோனேஸியாவின் சுமாத்திரா தீவுகளிற்கருகில் கடலடியில் புவிததகடுகளிற்கிடையே ஏற்பட்ட உரசல்கள் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம்  பாரிய சுனாமிப் பேரலைகளை உருவாக்கின. இது ரிச்டர் அளவுப்படி 9.0 ரிச்டர்களைக் காட்டியது இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா,மலேசியா, மாலைதீவு, பர்மா, கென்யா,தன்ஸானியா,மடகஸ்கார், சீஸெல் தீவுகள், அந்தமான் நிகோபார்  என இந்து சமுத்திரத்தை சூழ்ந்த பல நாடுகள், தீவுகள் பாதிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர், சொத்துக்களின் இழப்போ மிகப்பல. உலகெங்கும் 2 லட்சம்  முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், பல்லாயிரம் பேர் அகதிகளாயினர், மனநலம் பாதிக்கப்பட்டனர், காணாமல் போயினர், உறவுகளை இழந்தனர்.
உலகிலே இடம்பெற்ற கொடூரமான இயற்கையளிவுகளில் இது 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சோக சாதனையை எட்டிக் கொண்டது
1960ற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி இதுவாகும்


இவ் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள்
 பூர்த்தியாகின்றது.


சுனாமி வர காரணம் என்ன ?

தரையில் பூமியதிர்சி  ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் சேதமாகின்றன. மலைப்பகுதியில் உண்டாகும் போது எரிமலை உருவாகிறது. இதுவே கடற்பரப்பில் பூகம்பம் உண்டாகும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாகின்றன. இவற்றின் வேகம் ஆரம்பமான இடத்திலிருந்து, கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 

சாதாரண மாக கடல் அலையின் உயரம் 7 அடிக்கு எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடியளவில் இருக்கும். ஆனால் அன்றைய தினம் இந்த அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளுகிறது.

சுனாமியை தடுக்க முடியா விட்டாலும், அது வரும் முன் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வைக்கலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன் ஆழிப் பேரலைகள் உருவாகின்றனவா என்பதை கண்டறிய, சுனாமி எச்சரிக்கைக்கருவிகள் பெருங்கடல்களில் அமைக்கப் பட்டுள்ளன. இது கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். 

இதன் அடிப்படையில் அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படப் போகும் அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். 

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.