Sunday, January 27, 2013

அமைச்சரவையில் இன்று மாற்றம்! பிரதமர் பதவி மாறாது!


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க நேற்று தெரிவித்தார்.

இதற்கமைய- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறும் நிகழ்வில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
 
 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றமே இன்று இடம்பெறுகின்றது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தகவல் ஊடகத் துறை- மின்சக்தி- எரிசக்தி- விஞ்ஞான தொழில் நுட்பவியல்- விளையாட்டு உள்ளிட்ட சில அமைச்சுக ளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

என்றாலும் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சர் பதவியோ- பிரதியமைச்சர் பதவியோ வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.


முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் வேண்டாம்: ஜனாதிபதி கோரிக்கை

மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வன்முறைகளை தூண்டும் வண்ணம் செயற்பட வேண்டாம் என பொதுபலா சேனா அமைப்பிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுபான்மை முஸ்லிம் மதத்தவர்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த அமைப்பிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். 

பௌத்த மதத்தை வலுப்படுத்துவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அது ஏனைய மதங்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது என அவா குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, தமது பெயரைப் பயன்படுத்தி சில அமைப்புக்கள் மதக் குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 


adaderana.lk

சம்மாந்துறை IFSDOஅமைப்பின் கல்வி அபிவிருத்தி திட்டம்



சம்மாந்துறை ஐடியல் நண்பர்கள் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 2013ம் ஆண்டிண் செயற்பாடுகளில்
ஒன்றான தரம் 05ல் கல்வி பயிலும் கல்வியில் ஆர்வமுள்ளää வசதிகுறைந்த மாணவர்களுக்கான பாடசாலை
உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சென்னல் கிராமம் பிரதேசத்தில் அமைந்துள்ள அஸ் ஸமா
வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கும்ää சம்மாந்துறை மஜீட்புரம் வித்தியாலயத்தில் கல்விகற்கும்
மாணவர்களுக்கும் IFSDO அமைப்பின் தலைவர்; M.S.M. பர்ஹான் அவர்களின் தலமையில் கற்றல் உபகரணங்கள்
 கடந்த 24 மற்றும் 26ம் திகதிகளில் வழங்கப்பட்டது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.