Sunday, February 3, 2013

சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி

தேசத்தின் இறைமையை உறுதி செய்வதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த இலங்கையர்களான நாம் 65வது தேசிய சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுளளதாவது:

சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது. மிகவும் கடினமான- சவால் நிறைந்த இப்பணியை நிறைவேற்றுவதானது தேசத்திற்கு நீதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும்.

நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கத் தேவையில்லாத ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது.

நாட்டுக்கு எதிராக அணிவகுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடிப்பதற்கு நாம் உறுதியான அர்ப்பணத்துடன் செயற்பட்டோம்.

தலைமைத்துவம் கடினமான சவால் நிறைந்த சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதும் நாம் நாட்டை காட்டிக்கொடுக்காத இலட்சியத்தைக் கொண்டவர்கள்.

எமது மக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கும் பாரிய ஒத்துழைப்பிலிருந்து நாம் மிகப்பெரும் பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

சமூகங்களுக்கிடையிலான ஐக்கியமும் சமய நல்லிணக்கமும் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கிய அம்சங்களாகும். எமக்கு மத்தியிலான பிரிவினைகள் எமது சுதந்திரத்தை எமக்கு மறுக்கும் பல்வேறு சக்திகளை பலப்படுத்திவிடும்.

எல்லா சமூகங்களும் ஐக்கியமாக எழும்போது நாட்டுக்கு எதிரான சக்திகள் பல்வீனமடைந்து சுதந்திரம் மேலும் பலப்படும். தேசிய ஐக்கியத்திற்கான மிகுந்த உறுதியுடனும் தெளிவான அர்ப்பணத்துடனும் நாம் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயர்ந்த தியாகங்களைச் செய்த எல்லா நாட்டுப்பற்றுடையவர்களுக்கும் நாம் எமது மரியாதையைச் செலுத்துகிறோம்
news.lk

இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை

வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்;சியடைகிறது.

கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு

பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.

மிகக்கொடூரமான யுத்தமொன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும்

சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டுள்ள

நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

பௌத்தர்கள்ää முஸ்லிம்கள் ஹிந்துக்கள்ää கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு

செழிப்புடனும்ää அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனைகளுமாகும்.

ஒரு

நாட்டின்

நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் நாட்டுப்பற்றையும்
சமூகää சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையையும்ää ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு

சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.

எனவே இந்நாட்டில் சௌஜன்யம்  ஐக்கியம் சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக்

கொடுப்புää நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நல்லாசி கூறுகிறது.

அபிவிருத்தியும்
முன்னேற்றமும்

அந்நாட்டு

மக்களின்

ஒற்றுமையிலும்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்

தேசிய பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013





சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013
கல்வி அமைச்சின் அறிவித்தலின் பிரகாரம் சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் தேசிய மீலாத் விழா 2013.01.28ஆந் திகதியன்று சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளாராக  MYA. ஜலில் மௌலவி அவர்கள் கலந்து சொற்பொலிவாற்றியதுடன் மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந் நிகழ்வை பாடசாலையின் அதிபர் TM.தௌபீக் அவர்களின் தலைமை தாங்க, மற்றும் ஆசிரியர்களான SL.மன்சூர், M. பைஸானா, I .ஹசீனா ஜென்னத் ஆசியோர் நெறிப்படுத்தினார்கள். 



--

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.